Saturday, May 7, 2011

இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.


பத்து மாதங்கள் என்னை
பக்குவமாய் சுமந்து
பல துன்பங்கள் தாண்டி
பாசமாய் பெற்றெடுத்து
பாரினிலே என்னை
பலர் முன் அறிமுகம் செய்த - என்
பாசமான அன்னையே!

இன்று உனக்கென
அன்னையர் தினமாம்!
அகிலத்தில் எம்மை
ஆளாக்கி காட்டிய உனக்கு
இன்று மட்டும் தான்
அன்னையர் தினமா?
ஆயுள் முழுவதும்
தினமும் வாழ்த்தினாலும்
ஈடாகுமா இங்கு
உனக்கு பட்ட கடன்?

பசியோடு நீ அங்கு
பட்டினியாய் இருந்தாலும்
பாசத்தோடு உதிரத்தை
பாலாக்கி ஊட்டுவாய்
பசி தீர்ந்து உனை பார்க்கும்
பாலகனை அணைத்திடுவாய்

பள்ளிக்கு எமை எல்லாம்
பாசமாய் வழி அனுப்பி
பக்குவமாய் வரும் வரை
பரிதவிப்பாய் காத்திருப்பாய் - உன்
பார்வையிலே எம் பிம்பம்
பட்டதுவும் ஓடி வந்து
பாசமாய் கட்டியணைத்து
பல முத்தங்கள் நீ சொரிந்திடுவாய்

இத்தனைக்கும் பாசமான
என் இனிய அன்னையே
உனக்கான நாளினிலே
உரிமையோடு வாழ்துகிறேன்
உரித்தாகுக வாழ்த்துகள்

இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

4 comments:

  1. இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

    அன்னையை வாழ்த்த வார்த்தைகள் இல்லை..

    ReplyDelete
  3. இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அன்னையர் தின வாழ்த்துக்கள்! கவிதை நல்லாயிருக்கு மா...

    ReplyDelete