Monday, December 27, 2010

நட்பு நிசப்தமான உறவா?

நட்புக்காக

நட்பை விலத்தும்

நட்பே

நட்பு என்ன

நினைவுகள் அற்ற

நிசப்தமான உறவா


காதலை விட

கண்ணியம் நிறைந்த

கற்பு கூடிய விடயம்

நட்புக்காக

காதலை துறந்தவர் உண்டு


நீயோ

புரிந்துணர்வற்ற நட்புற்காய்

உண்மை நட்பை

விலக்குகிறாய்


நட்பு இல்லயேல்

நாளிகை கூட

வாழ முடியாத நீ

இதயத்தை கல்லாக்கி

எப்படி வாழ்கிறாய்


உன் நாடித்துடிப்பே

அடங்கிவிடும்

இப்படியே நீ

இருப்பாய் என்றால்

இதை கூட புரியாமலா நீ

2 comments: