நீ என் அருகில் இருக்கையில்
நான் படும் காயமெல்லாம்
தானாய் ஆறி விடும்
என் காயங்கள் எல்லாம்
மாயமாகிவிடும்
ஆயினும்
உன் இதயம் காயம் கொண்டு
உன் கண்ணில் கண்ணீர் கண்டால்
தோழியே என்னை மன்னித்து விடு
கண்ணீர் காணும் முன்னால்
உன் காயத்தை என்னால்
ஆற்ற முடியவில்லையே........!
எழுதியவர் - மிருணன்
எழுதியவர் - மிருணன்

காதல் கவிதைகள் எழுத முதலில் நிறைய படியுங்கள், உணர்வுகளை குவித்து எழுதுவதால் மட்டும் அது கவிதையாகாது ...
ReplyDeleteநன்றி நண்பர் கே.ஆர்.பி.செந்தில் அவர்களே! முயற்சிக்கிறேன்.
ReplyDeleteஎன் தோழி என் கண்முன்னால் பின்னோக்கி செல்கிறேன் உங்கள் வரிகளை படித்து விட்டு என் தோழியின் நினைவுகளுடன்
ReplyDeleteநன்றி நண்பர் தினேஷ். பின்னோக்கிய நினைவுகளில் கூட ஓர் இனிமை இருக்கிறது.
ReplyDeleteஉங்களின் சில கவிதைகள் மிக நன்றாக உள்ளன. சில உரைநடை போலவும் இல்லாமல், கவிதை போலவும் இல்லாமல் ஏன் இப்படி..? ஓய்வா இருக்கும் போது நம்ம பக்கம் வாங்க கவிதை பேசலாம்.
ReplyDeleteஉங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி நண்பரே. முயற்சிக்கிறேன்.
ReplyDeleteஉரைநடைக் கவிதைகள் வேறு. உணர்வுகள் மிகுந்த புதுக் கவிதைகள் வேறு
ReplyDeleteகவிதை அருமை :)
ReplyDeleteநன்றி நண்பா் சி.பி.செந்தில்குமார் அவா்களே. கூடிய விரைவில் thamizmnam இண்ட்லியில் இணைக்கிறேன்
ReplyDeleteநன்றி நண்பா் மங்குனி அமைச்சர் அவா்களே
ReplyDelete