Tuesday, December 28, 2010

முகாரி ராகமாய்.......!

முகவரி தொலைந்த
முகாரி ராகமாய்
முகம் தெரியா நம் நட்பு
முடிந்து விடும்
என்று பயந்தேன்

சரணம் பாடி
மங்களம் சொல்லாது
பைரவி பாடி
பல்லவி ஆக்கிவிட்டாய்
இனி நம் வானம்
என்றும் அனுபல்லவியே!

4 comments:

  1. நல்ல ராகமாக இருக்கும்..

    ReplyDelete
  2. கண்டிப்பாக. நன்றி நண்பரே

    ReplyDelete
  3. ராகங்களின் பின்னணியில் ஒரு நட்பு இசையாய் கசிகிறது..... நல்லது. நடக்கட்டும்.

    ReplyDelete
  4. ராகங்களை வைத்து ஒரு நட்பு பாலம் கட்டி இருக்கிறீர்கள், அருமை..

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete