Monday, December 27, 2010

நித்தமும் நீ வேண்டும்

அன்று நம் வானம்
ஆயிரம் விண்மீன்கள்
பூத்துக் குலுங்கிய
அழகிய நந்தவனம்
ஆசை உள்ளங்களான
அன்றில் பறவைகளின்
அன்புக் கூடு அது

அலையடிக்கும்
புயல் வீசும் - ஆனால்
நாணற் புட்களாய்
வளைந்து கொடுக்கும்
அன்பு உள்ளங்கள்

கைகோர்த்து கதை பேசி
சிறு சண்டை புரிந்து
சின்னதாய் சீண்டி
சிறு ஊடல் கொண்ட
சினேகமான நினைவுகள்

நினைத்துப் பார்க்கையில்
நெஞ்சமெல்லாம் ஆனந்தம்
நினைவுகளை நிரந்தரமாய்
தந்துவிட்டு செல்லாதே!
நித்தமும் நீ வேண்டும்
சிறு சண்டை நான் போட!

8 comments:

  1. பால்ய வயதுத் தோழர்களைத் திரும்பப் பெற
    நினைக்க வைக்கிறது கவிதை. இது விஷயம்
    என் முயற்சியை தீவிரமாக்குகிறேன் இன்று
    நன்றி

    ReplyDelete
  2. >>>நித்தமும் நீ வேண்டும்
    சிறு சண்டை நான் போட!

    சூப்பர்

    ReplyDelete
  3. நன்றி நண்பர் வினோ

    ReplyDelete
  4. நன்றி நண்பி மீனா

    ReplyDelete
  5. நன்றி நண்பர் கார்த்திக்குமார்

    ReplyDelete
  6. நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete
  7. நன்றி நிலாமதி அக்கா. உண்மை அன்பில் வளைந்து கொடுத்தால் தான் மகிழ்வாக வாழலாம்

    ReplyDelete