Saturday, December 25, 2010

உறவுகளை தொலைத்த உள்ளங்கள் சார்பாக.........!

மண்ணை வந்து

முத்தமிட முன்னர்

கருவிலயே

காலனிடம் சென்ற

பிஞ்சு நெஞ்சங்கள்


தம் பாலகர்களின்

இனிய கனவுகளை

நெஞ்சிலே சுமந்து

மார்போடு அணைத்த

பெற்ற உள்ளங்கள்


வாழ்க்கைப் பாதையில்

வாழ்வதற்கு இணைந்து

துணைகளை தொலைத்து

வாழ்க்கையை இழந்த

இளம் ஜோடிகள்


இதயங்களை பரிமாறி

இனிமையான கதைகள் பேசி

இனிய ஆசைளை

இதயத்தில் சுமந்த

காதல் ஜோடிகள்


உணர்வுகளை புரிந்து

உரிமையோடு பழகி

ஒன்றாக உணவருந்தி

கை கோர்த்து திரிந்த

நட்பு உள்ளங்கள்


தள்ளாத வயதினில்

தன் உற்ற துணையை

தயவென எண்ணி

தன்னம்பிக்கையுடன் இருந்த

நம் முதியோர்கள்


இத்தனை பேர்களின்

கனவுகளை காவு கொண்ட

இயற்கை அன்னையே

உனக்குப் பேர் தான்

சுனாமியாம்.........!


இன்றைய நாளிலே

உன் தாகத்திற்கு பலியான

அன்பு உள்ளங்களிற்கு

அஞ்சலி கூறுகிறோம்

உறவுகளை தொலைத்த

உள்ளங்கள் சார்பாக.........!

6 comments:

  1. உண்மை தான். இயற்கை தன் தாகத்தை சில நிமிடங்களில் தணித்தாலும் அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் இன்னும் முடியவில்லை.

    நன்றி நண்பர் தினேஷ்குமார்

    ReplyDelete
  2. கவிதை மிகவும் அருமை
    உறவைத் தொலைத்த உள்ளங்கள்
    படும் பாட்டை வார்த்தையில் வர்ணிக்க முடியாது
    தொலைந்து போன உறவுகள்
    மனதில் என்றும் துணையாகத் தங்க
    அவர்களுக்காக வேண்டிடுவோம்

    ReplyDelete
  3. உண்மை தான் நண்பி. நன்றி. அவர்களுக்காக நாமும் வேண்டிடுவோம்

    ReplyDelete
  4. நன்றி நண்பர் வினோ

    ReplyDelete
  5. நன்றி நண்பர் நிலாமதி.

    ReplyDelete