Thursday, December 23, 2010

நட்பிற்கு பிறந்த நாள்

தோழியே!
உணர்வோடு கலந்து
உயிரோடு உறவாடும்
உண்மையான நம் நட்பிற்கு
இன்று பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கூற என்னிடம்
வார்த்தைகள் கிடைக்கவில்லை

நம் நட்பின் பரிசாக
நமக்குக் கிடைத்த
நம் நட்புக் குழந்தை
இன்று நம்முடன் இல்லை
இருந்தும் நம் நட்பு
நன்றாகவே தொடர்கிறது

நம் உதிரத்தில்
நாடித்துடிப்பு வரை
நாம் வாழ்வோம்
நம் உண்மை நட்பிற்காய்
நமது நட்பிற்கு
நூற்றாண்டு வயது கண்டு
நாம் வாழ்வோம்
இவ் வையகத்திலே...
இனிய நண்பர்களாக
கைகோர்த்து...............!

6 comments:

  1. "உயிரோடு உறவாடும்
    உண்மையான நம் நட்பிற்கு
    வாழ்த்துக்கள் கூற வார்த்தைகள் கிடைக்கவில்லை"

    ReplyDelete
  2. உங்கள் நட்பிற்கு என் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. நட்பிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உங்கள் வாழ்த்திற்கு நன்றி நண்பர் வினோ , கலாநேசன் அஅவர்களே!

    ReplyDelete
  5. நன்றி நண்பி மீனா உங்கள் வாழ்த்துகளுக்கு

    ReplyDelete