Sunday, December 5, 2010

ஒர் பெண்ணின் ஏக்கம்

சமுதாயமே!

நான் நானாக இருக்க

உன்னிடம் மடியேந்துகிறேன்

என் சோகத்தின் போது

இனிய தோழனின்

தோளிலே சாய்ந்து

அமைதி கேட்டேன்

அயலவர் சொன்னார்கள்

அந்நியனுடன்

உறவாடுகிறேன் என்று!



பத்திரிகைகளில்

பெண்ணியம் பற்றி

ஆக்கங்கள் போட்டேன்

அறிவாளிகள் வாழ்த்து

சொன்னார்கள்

ஏனையோர் மனதார

பட்டம் தந்தார்கள்

சமூகத்தை மதிக்காத

அடங்காப்பிடாரி என்று!



என் கவிதையை

மதித்த ஒருவன்

மனதார கேட்டான்

தனக்காக மனையாளாய்

நீ வேண்டும் என்று

அவனின் பெண்ணியத்தை மதித்து

வாழ்க்கையை பகிர்ந்தேன்

பின்பு தான் தெரிந்தது

அவன் மதித்தது

என் மனதை அல்ல

என் எழுத்துக்களை

மட்டும் தான் என்று



என் எழுத்துகளை

வியாபாரமாக்கினான்

தானே என்னால்

புகழும் சேர்த்தான்

ஆனால்

வீட்டிற்குள் என்னை

புழுவாக பார்த்தான்

இப்போ தான் புரிந்தது

மரத்திற்கு எவ்வளவு தான்

ஆதாரமாய் வேர்கள் இருந்தாலும்

அவை வெளிவருவதே இல்லை

இன்று

அப்படித் தான் பெண்களும்

இச் சமுதாயத்தில்!

7 comments:

  1. சமூகம் பேசட்டும் தோழி
    சாமுகமமா பசித்திருக்கையில்
    சோறு படைக்கிறது
    வீழ்ந்தாலும் தூற்றும்
    வாழ்ந்தாலும் தூற்றும்
    சாக்கடை வாழ் சமுகம்
    துணிந்து வீசுங்கள்
    சாட்டையை
    சாட்டையாக தோழமை
    தோள் கொடுக்கும்

    ReplyDelete
  2. உண்மை தான் சமூகத்தை பார்த்திட்டு இருந்தால் இவ் உலகில் வாழ முடியாது.
    இங்கு தன் உணர்வுகளை மறைத்து மனதை பூட்டி வைத்து போலியாக வாழும் பெண்களுக்கு மட்டும் தான் மரியாதை உள்ளது

    ReplyDelete
  3. உங்கள் கூற்று உண்மை தான்.. ஆனால் அதன் தாக்கம் குறைந்திருக்கிறது என்று நன்புகிறேன்...

    கவிதை அருமை...

    ReplyDelete
  4. உண்மை தான். இன்று 75 வீதம் குறைந்து விட்டது. இருந்தாலும் சில சமூகத்தில் இந்த தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. படித்தவர்கள் மட்டத்தில் அல்ல. பாமர மக்கள் பக்கம்.

    ReplyDelete
  5. அருமையான கருத்து தோழி.........சற்று தடுமாறி விடீர்கள், துணையை தேர்வதில். இங்கு தான் பெண்கள் சகல் வழிகளிலும் (வெளி நாடு) சொந்தக் காலில் நிற்க வழி இருக்கிறது . பாதை தவறென்றால் வெட்டி விட்டு வேறு வழி பார்க்கவும். . வேராக் தாங்கும் மரத்துக்கு தெரிவதில்லை வேரின் அருமை .அழகான் உதாரணம்.

    ReplyDelete
  6. ////ஏனையோர் மனதார
    பட்டம் தந்தார்கள்
    சமூகத்தை மதிக்காத
    அடங்காப்பிடாரி என்று////

    அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்...

    காய்க்கும் மரங்களை நோக்கித் தானே கல்லெறிகள் வரும்...

    மதி.சுதா.

    நனைவோமா ?

    ReplyDelete
  7. அருமையான கவிதை வரிகள்.

    ReplyDelete