Wednesday, December 1, 2010

முதல் சந்திப்பின் நினைவாக

அறிமுகமே இல்லாத உன்னை
அன்று தான் முதலில் பார்த்தேன்
அந்தக் கணப் பொழுதிலேயே
ஆலவிருட்சமாய் வந்துவிட்டாய் மனதில்
அலை போல ஆர்ப்பரிக்கின்ற
ஆயிரம் உறவுகளுக்கு மத்தியில்
ஆரவாரமே இல்லாது
அடிபணிந்தாய் உன் தந்தையிடம்
அன்றே என் மனதில் இடம் பிடித்தாய்
கோபுரத்தை விட உயர்வாக
இனியவனே நீ எனக்கு
இறுதி வரை வேண்டும்
இனிய சகோதரனாய்.

4 comments:

  1. கூட பிறந்தால் மட்டும் தான் சகோதரனா? சகோதரனாக நினைத்தாலே சகோதரன் சகோதரன் தான். அதை எத்தைனை உறவு வந்தாலும் மாற்ற முடியாது.

    Wish all the best for your good relationship. god bless you.

    ReplyDelete
  2. காணக்கிடைக்காத வரிகளாய் நட்பின் உயர்வு அருமை தோழி நண்பனாய் என்றும் நானிங்கு

    ReplyDelete
  3. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நல்ல கவிதை கிடைக்கும்..

    ReplyDelete