Friday, December 31, 2010

அன்பே சென்று வா

அன்பே!
இன்றோடு நீ
என்னை விட்டு சென்றாலும்
நீ விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் என் மனதிலே...!

நீ தந்த காயங்கள்
நெஞ்சோடு இருந்தாலும்
நினைத்துப் பார்க்கையில்
என்றும் இனிமையே!

உன்னாலே கிடைத்த
உறவுகள் ஆயிரம்
உயிரோட்டமான வாழ்க்கையின்
உயிருள்ள ஓவியங்கள்

சென்று வா அன்பே
உன் நினைவுகளுடன்
உனதன்பு உறவோடு
இன்னும் வாழ்வேன்..........!

6 comments:

  1. தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு மலர்வதாக......

    ReplyDelete
  3. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. கவிதை நல்லாருக்கு, வாழ்த்துக்கள். 2011இல் சாதனை படைக்க

    ReplyDelete
  5. நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களுக்கும் இப் புதிய ஆண்டு இனிய புத்தாண்டாக அமைய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete