துயரோடு வாழ்பவர்க்குதுயரே தான் வாழ்க்கை என்று
துளிகூட வருத்தமின்றி
கொடுத்து விட்டான் இறைவனும்
ஊணின்றி உறவின்றி
உடுத்திவிட உடையின்றி
உரிமையாய் தோள் சாய
உற்றதுணை ஏதுமின்றி
நிர்கதியாய் நிற்கின்ற
நிகரில்லா உறவுகள்
இயற்கை கூட இவர்களிடம்
இரக்கம் காட்ட மறுக்கிறது
தன்சோகம் தீர்த்து விட
தயக்கமின்றி பொழிகிறது
வான் மழையே போதும் உன்
வரையறையில்லா பொழிவு!
உன்னாலே இங்கு
உயிர்ச்சேதம் ஓராயிரம்
ஆர்ப்பரிக்கும் உன்
ஆவேச வெள்ளத்தை
அடக்கி விடு இத்துடன்
அமைதியை நிலவச்செய்து
அனைவரையும் வாழவை!
இயற்கை அன்னையே
இனிபோதும் உன் சீற்றம்
இனிமையான வாழ்வை
இனிதே நல்கிடு
இப் பூவுலகின்
இனிய நெஞ்சங்களுக்கு!
நன்றி நண்பர் நாஞ்சில் மனோ
ReplyDeleteகாலத்துக்கேற்ப கவிதை அருந்தா...
ReplyDelete