Friday, January 14, 2011

பொங்கலின் ஏக்கம் ஓர் புதுவசந்தத்திற்காய்.....!

அன்று
செல்வ செழிப்பில்
அன்புச்செல்வங்களுடன்
சீராட்டி சோறூட்டி
சிரித்திருந்த காலத்தில்
விடியலை பார்த்தாலே
நெஞ்சமெல்லாம் புன்னகை!

கதிரவனை வரவேற்க
கை நிறைய நெல்மணிகள்
காலையில் எழுந்து
கண்கவர் கோலமிட்டு
கதிர் குற்றி சூடடித்து
கலகலப்பாய்
பொங்கல் செய்தல்...!

இன்று
காலையின் விடியலே
ரணங்ளை தாங்கி......!
எழுந்த பிஞ்சு
என்னம்மா உணவென்று
ஏக்கத்துடன் கேக்குமென்று!

ஆறுதல் சொல்ல கூட
பெற்றவள் உடலில்
போதிய சக்தி இல்லை
பெற்றவளை புரிய அந்த
பிஞ்சுக்கும் வயது இல்லை
இத்தனைக்கும் உதவ
உறவென்றும் யாருமில்லை!

பட்டினியை பார்த்து
பரிதவிக்கும் உள்ளங்கள்
இன்னும் உள்ளது
இவ் வையத்தின் மூலைகளில்....!
இன்றைய பொங்கலே
இவர்கள் துயரங்ளை
இனிமையோடு தீர்த்துவிடு
இனியாவது பிறக்கட்டும்
இவர்களுக்கு புதுவசந்தம்!


நண்பர்கள் அனைவருக்கும்
நல் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

7 comments:

  1. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    ஒப்புமை நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  3. நன்றி நண்பர்கள். உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இனிய பொங்கல் வாழ்த்துக்கள. புதுவசந்தம் பொங்க இறைவனை பிரார்திப்போம்.

    ReplyDelete
  6. முள்வேலிகளுக்குள்ளும்... பொங்கி தனலாய் தகித்துக் கொண்டிருக்கின்றன எங்கள் ஏக்கங்கள்.. உங்கள கவிதைகள் போலே

    ReplyDelete
  7. நன்றி தோழி நிலாமதி

    ReplyDelete