Saturday, January 1, 2011

இனிமையோடு வா.........!

அன்பு உறவே
அமைதியாய் வந்திடு
ஆர்ப்பரிக்கும் உள்ளங்களுக்கு
ஆறுதல் கொடுத்திடு

இனிய உறவே
இரு கரம் கூப்பி
இசைக்கிறேன்
இனிமையோடு வா

இல்லங்கள் தோறும்
இன்பத்தை பரப்பிடு
இருளினை போக்கி
இன்னல்கள் தீர்த்திடு

ஈன்றவர் வாழ்க்கையில்
இன்பத்தை ஊட்டிடு
உயர்வாய் வாழ
ஊக்கத்தை தந்திடு

எண்ணுவதெல்லாம்
ஏணிப்படிகளாய்
ஒன்று சேர்ந்திட
வழி சமைத்திடு

உன் ஆரம்பம்
உலகுக்கு ஓர்
புதிய அத்தியாயமாய்
திகழ்ந்திட அருளிடு..!

4 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  2. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. நன்றி நண்பர் தஞ்சை வாசன்

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete