அன்று என் நண்பன்ஆசையாய் பயணித்தான்
முழு சொகுசு பேருந்தில்
அன்றோடு அவன் வாழ்வில்
அது மறக்க முடியா
அனுபவமாயிற்று.
பெரிதாக ஒன்றும்
சொல்வதற்கு இல்லை
காரணம்
பேருந்தின் குளிரூட்டல்
அவனால் தாங்க
முடியாமை தான்!
அவனுக்கு வாழ்க்கையில்
ஆயிரம் லட்சியங்கள்
அத்தனையும் தூக்கிபோட்டான்
அந்த நொடியலேயே!
அவன் கனவே வெளிநாட்டில்
மேன்மையான தொழில் பார்ப்பது
அந்த பேருந்து பயணத்தின் குளிர்
அவன் வாழ்க்கையின்
இலட்சியங்களுக்கு
முற்றுப்புள்ளி ஆகியது.
இந்த குளிரே இப்படி என்றால்
வெளிநாட்டுக் குளிர்....?
ஐயகோ.....!
ஒரு சொகுசு பேருந்துப் பயணம்
என் இனிய நண்பனின் வாழ்வில்
மறக்க முடியா அனுபவம்......!
அவன் இலட்சியங்களுக்கு
முற்றுப்புள்ளி......!
நினைத்துப் பார்க்கவே
கண்கள் பனிக்கிறது!
நட்பே ஒரு குளிர் உன்னை
இப்படி ஆக்கிவிட்டதா.....?
நன்றி பிரஷா அக்கா. நண்பன் தானே காமெடியா போட்டாலும் கோவிக்க மாட்டான். இருந்தாலும் நான் பொய் சொல்லலயே! அவனோட அனுபவத்தின் வேதனையை தானே சொல்லி இருக்கன்.
ReplyDeleteஎதற்காகவும் லட்சியத்தை தூக்கிபோடக்ககூடாது.. நண்பனிடம் கூறுங்கள்.
ReplyDeleteகண்டிப்பா நண்பனிடம் சொல்ல தான் வேணும். இருந்தாலும் அவன் பாவம். ரொம்ப பயந்து போய் இருக்கான். முடிந்தால் நீங்க சொல்லுங்க வெளிநாட்டு குளிரின் அனுபவம் பற்றி. பயப்பட வேணாம் என்று.
ReplyDeleteதுன்பத்தைக் கடந்து தான் இன்பம் என்று எடுத்துச் சொல்லுங்கள். வாழ்க்கை ஒரு சவால் அதை சமாளித்து தானே ஆகணும்....
ReplyDelete