Saturday, April 23, 2011

சிறகுகள்

கன்னி தேவதையே!
காதல் வானிலே
கைகோர்த்து பறந்திட
காதலெனும் சிறகை
கையேந்தி கேட்டேன்!
நீயும்
சற்றேனும் தயக்கமின்றி
சாமர்த்தியமாய் தந்தது
வாழ்க்கை பாதையில்
காதல் ஜோடிகளாய்
வட்டமடிக்கும் சிறகல்ல!
ஈரடி பறந்து இறக்க
ஈசல் பெற்றுக் கொண்ட
சீக்கிரம் சிதைந்திடும்
சிறகுகள் என்பது!

3 comments:

  1. நன்றி நண்பர் மாணவன்

    ReplyDelete
  2. நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete